நம்மை நாம் அறிவோம்

என் பெயர் துமிலன் நான் ஒருவர் பிரிண்டிங் பிரஸில் வேலை செய்து வருகிறேன். சுமார் 16 வருடம் முன்பு 1996 -ம் ஆண்டு பிற் பகுதி வேலை முடித்து விட்ட மாலை நேரம் என் வீட்டு அருகில் பிளாஸ்டிக் பெட்டி (வளையல்) அதன் உரிமையாளர் திரு. கே. மனோகரன் உடன் பழக்கம் ஏற்ப்பட்டது. அவர் ஜாதகம் சொல்லவும், ஆராச்சியும் செய்து வந்தார். எனக்கு ராசியும், நட்சத்திரமும், கிரகமும் அதன் அதிபதியும், எந்த கிரகம் எத்தனை வருடம் லக்னம் எப்படி பார்ப்பது என்று எல்லாம் தெரிந்து கொண்டேன். பிறகு நான் (2000 -ம்) ஆண்டு சொந்தமாக பிரஸ் வைத்து தொழில் முழு கவனமான செலுத்தி அப்பொழுது 2002 -ம் ஆண்டு என் உறவு முறை உள்ள பெண் வீட்டார் ஒருவர் ஜாதகம் கொண்டு வந்து எப்படி உள்ளது என்று கேட்டார். அந்த ஜாதகம் உடையவர் பெயர் கே. சீனிவாசன் 28 -11 -1970 அதிகாலை 5 -௦௦00 க்கு பிறந்தார் என்று இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி ஏற்ப்பட்டது. ஏன்? என்னால் அதே நாள் அதே நேரத்தில் நானும் பிறந்தேன். நான் பிரஸ் தொழில் செய்து வருகிறேன். அவர் கே. சீனிவாசன் வக்கிலாக உள்ளார். ஏன் இந்த வித்தியாசம் என் குருநாதர் கே. மனோகரன் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் விளக்க ஜோதிட புத்தகத்தில் இல்லாத விளக்க ஒரு ஜாதகம், தசை, புத்தி, அவருடைய உறவு முறை வைத்துதான் செயல்படுகிறது. அதே போல் கைரேகை மாறுபட்டு இருக்கும் என்றார். அதன் பிறகு என் நண்பர் தொழில் சம்பந்த நண்பருக்கு உறவு முறைக்கு ஜாதகம் சொன்னேன்.

முகவுரை -1

குருவின் அருளால் ஜோதிடம் எழுதிகிறோம். நான் ஜோதிடம் மற்றும் ரேகை சாஸ்த்ரியல்ல. இப்படி ஒரு ஜோதிடம் எழுதும் எண்ணமும் இல்லை. இருப்பினும் குருவின் திருவருள் எனது உள்ளத்தில் புகுந்து தூண்டியதின் அருளால் ஜோதிட கலையை ஆராய்ந்தும். அனுபவங்களையும் கொண்டு எழுத்து வடிவத்தை பதிய வைத்தோம். மேலும் ரேகை சாஸ்திரி திரு. சக்திதாசன் அவர்கள் எழுதப்பட்ட ரேகை சாஸ்திரம் நூலை மிக கவனுத்துடன் படித்து கிரக நிலவரங்களை அறிந்து கொண்டு காலத்திற்குகேற்ப ஒத்து எழுதினோம். வருங்காலத்தில் ஜோதிடம் விருப்பம் உள்ளவர்கள் நல்ல நினைவாற்றலுடன் படித்து பயன் பெறுமாறு கேட்டுகொள்கிறோம். பல வருடங்கள் முன்பு ஒரு இளைஞன் என்னுடைய கைரேகை கவனித்து உங்கள் எண்ணங்களில் ஜோதிடம் உருவாகும் என்றும். அவை ஒரு வருடத்தில் உதயமாகும் என்றும் கூறினான். பிறகு சிறிது காலத்திற்கு பின் ஜோதிட எண்ணங்கள் பற்றிக் கொண்டது. பிறகு அது முதலை என்னை ஜோதிடர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். மேலும் ஜோதிடம் கற்பதற்கு முறையாக குரு பயிற்சியும் பெறவில்லை. எனது உள்ளத்தில் எழும்பிய ஜோதிட இயல்பு நிலையக் கொண்ட அறிந்தும் ஆர்ய்ந்தும் வந்தோம். ஜோதிடத்தில், ஜாதக அலங்காரமாகவும், ரேகை தத்துவமாகவும் எண் கணித முறையாகவும் உண்டு. வலி பலவாறாக இருப்பினும் இருப்பிடம் ஒன்றுதானே அது போல் அவருடைய நிலையை ஜாதக வழியாகவும், ரேகை வழியாகவும் அறியலாம் என்பதே ஜோதிடக்கலை ஆகும்.

முகவுரை -2

குறிப்பாக உலகில் தோன்றிய விலங்கினங்கள், பட்சிகள், சிறுபிராணிகள் போன்றவை குறைந்த அறிவானாலும், இயற்க்கையின் சக்தியை நன்கு அறிந்திருக்கிறது. மாறாக மனிதன் நிறைந்த அறிவட்ட்றல் பெற்று இருப்பினும் மாபெரும் இயற்கை யின் சக்தியை அறிந்திருப்பதில்லை. தம் ஆறாம் அறிவை அறியாமைக்கு பயன்படுத்தி தன்னை இழிவுபடுத்தி கொள்கிறான். உலகில் ஜோதிட கலை உருவான பின் ஞானிகள், ரிசிகள் போன்றவர்கள் வான் மண்டலத்தில் சுற்றி வரும் கோள்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும், பஞ்ச பூதங்களின் சக்தியையும் நன்கு ஆரய்ந்து எழுதி வைத்துள்ளார்கள். இவை உய்ரினங்களோடு எவ்வாறு தொடர்பு வைத்துள்ளது என்பதையும் தெரியபடுதினர்கள். ஏசுபிரான் அவர்கள் விதி என்பது நெற்றியில் எழுதப்படவில்லை. அவை மது கைகளில் வரையப்பட்டிருக்கிறது என்றார். அனேக மக்கள் அடிக்கடி கூறுவது உண்டு அது நம் தலை எழுத்து என்று. நாம் விதி போக்காக மாறும் பொழுது அவை நம் தலை எழுத்து என்று நினைப்பதுண்டு. ஆகவே எவர் தலையிலும் கடவுள் எழுதப்படவில்லை. ஆதலால் தலை எழுத்து என்பது. ஒருவர் ஜாதகத்தில் இராசி சக்கரம் வரையப்பட்டிருக்கும். அதில் லக்னம் என்று எழுதப்பட்டிருக்கும். அந்த லக்னத்தை சுற்றி கிரகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆகவே இலக்கணம் தலையாகவும், அதை சுற்றி உள்ள எழுத்துக்களும் கிரங்கலாகவும் இருப்பதால், இவையே தலை எழுத்து என்று கூறபடுகிறது. இந்த வாசகம் உலகஅளவில் கூறப்படுகிறது. அதுதான் ஜாதக தலை எழுத்துப்படி ஜாதகரின் ஏற்ற தாழ்வுகள் கவனிக்கப்படுகிறது.

முகவுரை- 3

பொதுவாக : ஜாதகம் என்பது பஞ்சாங்கம் வழியாக கணிக்கபடுகிறது. சூரியனைக் கொண்டு லக்னத்தையும் சந்திரனைக் கொண்டு நட்சத்திரமாகவும் கணிக்கபடுகிறது.
ஆனால் கை ரேகை அவ்வாறு இல்லை. ஒரு குழந்தைப் பிறக்கும்பொழுது கர்ம வினைக்கேற்ப ஜீவ மின்சாரம் கைகளில் ரேகைகலகப் பதிவாகி விடுகிறது. பிறகு குழந்திகள் நாக்கு வளர்ந்த பின் ரேகைகளும் தெளிவாக தெரிய ஆரம்பித்து விடுகிறது. பிறகு அந்தக் காலப் பருவத்திற்கு ஏற்ப சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.கைரேகைகளில் இருதயரேகை, புத்திரேகை, ஆயுள்ரேகை மற்றும் விதிரேகை போன்றவற்றை இலக்னம். இலக்னதைக் கொண்டு ஆதிபத்தியம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு தசாபுத்திகள் கணிக்கப் படுகிறது. குறிப்பாக: சராசரியாக ஒருவரின் கைரேகையில் விதிரேகையைக் கொண்டே ஏற்றத்தாழ்வுகள் கணிக்கப் படுகிறது. இருதயரேகையைக் கொண்டே உறவு, கணவன்-மனைவி, உறவுநிலை,நட்பு, லட்சியம்,பரிதாபம் ஆகியவை கணிக்கப் படுகிறது. புத்திரேகையைக் கொண்டு தெளிவு, ஒழுங்குமுறை, முயற்சி, தடை, மந்தநிலை ஆகியவை கணிக்கப் படுகிறது. மற்றும் ஆயுள்ரேகையைக் கொண்டு உடல் ஆரோக்கியம், நோய் , விபத்து ,மரணம் ,உடல் விருத்தி ஆகியவை கணிக்கப்படுகிறது. மேலும் கட்டைவிரலைக் கொண்டு குணங்களை அறியலாம் என்று கூறப்படுகிறது.இவை உண்மையாக இருப்பினும் அதைப் பற்றிய ஆராய்ச்சி அதிகம் தேவைப்படுகிறது.ஏன் என்றால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கட்டைவிரல் மிக ஆதாரமாக இருப்பதுண்டு.

முகவுரை- 4

குறிப்பாக: ஜாதகத்தை சரியாக கணித்து கூற வேண்டும். உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டு (அல்லது) மூன்று குழந்தைகள் பிறந்து விடுவதுண்டு அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு கை ரேகைகள் கவனித்தோமானால் வெவ்வேறு மாறுதல்களாக அமைந்து இருக்கும். இவை விதி பயனை மாறுபட்டு காட்டுவதாகவும். அனால் ஜாதகத்தில் அப்படி அமைவதில்லை காரணம் ஒரே நேரத்தில் ஒரே லக்னமாகவும் ஒரே நட்சத்திரமாகவும் ஒரே இரசியாகவும் ஒரே மாதிரியான ஆதிபத்தியங்கள் அமைந்திருக்கும். அதேபோல் ஒரு மாவட்டத்தில் நூறு குழந்தைகளுக்கு மேல் பிறப்பதுண்டு. அக் குழந்தைகள் ஒரே மாதிரியான இலக்னத்திலும் ஒரே மாதிரியான நட்சத்திரத்திலும் ஒரே மாதிரியான இராசியிலும் பிறக்கும். இது போன்ற அமைப்பில் உள்ள குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பலன்கள் நடக்காது. காரணம் இரத்த பந்த மாறுபாட்டால் என்று அறிய வேண்டும். மற்றொரு வகையில் கவனிக்க வேண்டும். ஒரே ஊரில ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கும். அன்றைய நாளில் இரண்டு நட்சத்திரங்கள் மாறுபட்டு வரும் என்பதை அறிய வேண்டும். மேலும் ஒரு லக்னத்திற்கு இரண்டு மணிநேரம் என்ற அளவில் ஒரு நாளைக்கு பன்னிரண்டு இலக்னம் மாறுபட்டு வரும். இந்த லக்ன வித்தியாசத்தில் குணங்கள் மாறுபடும் . இவை எல்லாம் கவனிக்கும்பொழுது ஜாதகம் கணிப்பதில் சற்று சிரமமாகவே இருக்கச் செய்யும். மேலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு குழந்தைகள் பிறக்கும்பொழுது எல்லாம் கிரக நிலவரங்கள் ஒன்றாகத்தான் இருக்கும். அனால் ஒரு குழந்தை வசதியுடன் வளர்ந்து வரும். மற்றொரு குழந்தை ஏழ்மையில் வளர்ந்து வரும் இந்த வித்தியாசங்களை நாம் அறிய வேண்டும்.

முகவுரை-5

குறிப்பாக: நாம் கவனிக்கும் பொழுது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு ஜாதகம் சொல்ல இயலாது. அன்னாருக்கு தசாபுத்திகள்நடக்கும்பொழுது அவை தன் உறவு முறை வைத்தே ஜாதகம் செயல்படும். மேலும் தன் இரத்த பந்தங்கள் சம்பந்தபட்டே ஜாதகம் செயல்படும். ஒருவரின் ஜாதகம் தன்னை சேர்ந்த மனைவி,குழந்தைகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை, தாய்,தந்தை,தாய்மாமன் இப்படி ஒரு சொந்தங்களை வைத்தே ஜாதகம் செயல்படும் என அறியவேண்டும். பொதுவாக எந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண் பக்கபலமாக அமைவது இயற்கை.அதில் தான் சூட்சமப்பொருள் அலங்கி உள்ளது.ஒருவர் திருமணத்திற்கு பிறகு பல ஏற்றங்கள் ஏற்படுவதுண்டு.சிலர் திருமணத்திற்கு பிறகு பல ஏமாற்றங்கள் ஏற்படுவதுண்டு. உதாரணமாக சில அரசியல் தலைவர்களை கூறுகின்றேன். திருமதி.இந்திரா காந்தி அவர்கள் தன் கணவரை இழந்த பின் பிரதம மந்திரி என்ற அந்தஸ்தை பெற்றார். மூதறிஞர் இராஜாஜி அவர்கள் தன் மனைவியை இழந்த பின் சரித்திரத்தில் இடம் பெற்றார். திரு A.P.J.அப்துல் கலாம் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சரித்திரத்தில் இடம் பெற்றார். இன்னும் சில தலைவர்கள் திருமணம் செய்து கொண்டும் திருமணம் செய்து கொள்ளாமலும் சரித்திரத்தில் இடம் பெற்றார்கள். இவை எல்லாம் ஜாதகத்தின் தன்மை அறிந்தே நடப்பது என்று அறிய வேண்டும்.

முகவுரை- 6

கிரகங்கள் செயல்படுகிறதா? பொதுவாக : இன்று நடக்கும் நட்டு நடப்பில் கிரகங்கள் செயல்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காரணம் நாட்டில் நடக்கும் அநியாயங்களை காணும்பொழுது கிரகங்கள் செயல் இழந்து விட்டதா என்று தோன்றுகிறது. உலகம் தோன்றிய காலத்திலிருந்து பல பாபப் புண்ணியங்கள் நடந்து கொண்டிருக்கத்தான் (செய்கின்றது) இருப்பினும் இன்றைய காலக்கட்டத்தில் நடக்கும் மனித வர்க்கத்தின் செய்யல முறைகள் அந்தோ பரிதாபம். குறப்பாக: ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு குற்றங்கள் செய்வோரை சட்டங்கள் கடுமையான தண்டனை கொடுத்து விடும்.ஆனால் இருபதாம் நூற்றாண்டு நெருங்கிய காலக்கட்டத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. சட்டங்கள் அதை மறைக்கின்றன. கொலை சர்வசாதரணமாக நடப்பது, படுக்கொலைகள் மிக கொடூரமாக நடப்பது, கற்பழிப்புகள், கேள்வி முறை இல்லாமல் ஆகிவிட்டது, ஆள் கடத்தல் வேலை, திருட்டுப் பேர்வழிகள், வழிப்பறிக் கொள்ளையர், ஏமாற்றும் தந்திரக்காரர்கள், ஏய்த்துப் பிழைக்கும் தாதாக்கள் இப்படி என்று சொல்லிக்கொண்டே போகலாம். சட்டங்கள் செய்யல்படுகின்றனவா? மக்கள் தவறு செய்தால் மன்னன் நீதி வழங்குவார். மன்னவனே தவறு செய்தால் யார் நீதி வழங்குவார் என்று கவியரசு கண்ணதாசன் உரையாடலை நினைவுப் படுத்துகிறது. ஆதலால் இன்று ஆட்சியாளர்களே பல சமூக விரோதிகளின் துணையுடன் குற்றங்கள் புரிகின்றனர். அக் குற்றங்களை மறைக்க சட்ட காவல் துறையினரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இவை தினசரி சம்பவங்களாக மாறிவிட்டன. ஏதோ ஒரு தர்ம சக்கரம் மக்களை பாதுகாத்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

முகவுரை- 7

ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையா? குறிப்பாக: ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர் இவற்றில் ஜோதிடக் கலையும் அடக்கம். கிரேக்கர் வான சாஸ்திரத்தில் பிறப்பிடமாகும். வானில் இயங்கும் கோள்களை வைத்தே ஜோதிடக் கலை பிறந்தது. மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையும் அவற்றை கட்டியாண்ட மன்னர்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் ஜோதிடக் கலையின் மூலம் துல்லியமாக கணித்துக் கூறினார். அன்றைய ஜோதிட வல்லுநர்கள். நம் பாரத நாடும் ஜோதிட கலையில் முன்னேற்றமாக திகழ்ந்தது. ஆரியபட்டர் என்பவர் வான சாஸ்திரத்தில் வல்லுநராகத் திகழ்ந்தார். வானியலும், ஜோதிடக் களையும் வெவ்வேறாகக் கருதக் கூடாது. கோள்களின் இயக்கம் மற்றும் மாறுதல்கள் மண்ணில் வாழும் மனிதனது வாழ்கை முறைகளில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே ஜோதிடமாக பரிணமிக்கிறது. ஆகையால் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையாக கருத வேண்டியதில்லை. மிகப் பெரிய மஹா ராஜாக்கள் தங்களின் செல்வாக்கு சரிந்த காலத்தில் ஜோதிடத்தை நம்பியே பயணித்துள்ளார்கள். சீனா, எகிப்து, இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளில் ஜோதிடக் கலை பிரபலமாக வளர்ந்துள்ளது. சாணக்கியசாஸ்திரம், சுந்திரப்புருஷர், வராஹமிகிரர், ஜாதக அலங்காரம், பூர்வபுனர்ஜென்ம அச்சாரம், அங்கலக்ஷணம் போறே ஜோதிடக் கலைகள் பிரபலமானவை என்று அறியலாம். காலத்தின் அருமை பெருமை உணர்ந்து அதன் வழியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் (அல்லது) அமைவதும் ஜோதிட வழியாகும். ஆதலால் ஜோதிடம் மூட நம்பிக்கையாகாது என்பது அறியலாம்.

முகவுரை- 8

குறிப்பாக: உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் பிரார்த்தனைகளில் அதிக நம்பிக்கை உடையவர்கள். கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஜெபப் பிரார்த்தனைகளும் ,இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுகை பிரார்த்தனைகளும் ,இந்துக்கள் கோவில்களில் மூலவரிடம் பிரார்த்தனைகளும் எண்ணிய எண்ணங்களுக்கு தக்கவாறு பிரார்த்தனைகள் செய்து கொள்வர். பிரார்த்தனைகள் மூலம் தம் குற்ற குறைகள் நீங்கும் என்று நம்பிக்கை கொள்வர். இப்பிரர்த்தனைகள் மூலம் பலர் மூடநம்பிகையாக மாற்றிக் கொள்வதுண்டு. பொதுவாக : நம் சிந்திக்க வேண்டும். பிரார்த்தனைகள் என்பது கஷ்டங்கள் தீருவதற்கு ,வசதிகள் பெருக்கி கொள்வதற்கு அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளத்தில் உள்ள தீய செயல்களை அகற்றுவதற்கே பிரார்த்தனைகள் வகுக்கப்பட்டது. உதரணமாக ஒருவர் ஆலயத்திற்கு சென்று பல வருடங்கள் பிரார்த்தனை செய்து வருவார. தனது தேவையை கருதி காலமாருதல்களுக்கு பின் அவர் ஜாதகப்படி தசாபுத்தின் நல்ல நிலையில் மாறிவரும். பிறகு கஷ்டங்கள் விலகி வசதி வைப்புகள் பெருகி வரும். இதனால் அண்ணார்க் கூறும் பதில் என்னவென்றால் என் பிரார்த்தனைகள் வீணாகவில்லை என்பதே. மாறாக மக்களில் பலர் பிரார்த்தனைகளில் ஈடுபடாமல் களத்தில் நல்ல பழங்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதை அனுபவத்தில் அறியலாம். ஒழுங்கு முறைகளை வளர்த்து கொள்வதற்கு பிரார்த்தனைகள் நமக்கு ஒரு சிறப்பு வழிக்காட்டியாகும்.

முகவுரை- 9

எண் கணித மூலமாக பெயர் மாற்றம் சரியா? குறிப்பாக: வானவியல் சாஸ்திரப்படி சூரியனை மூலமாக கொண்டு மற்றக் கோள்களுக்கும் எங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜோதிடக் கணிதப்படி கோள்கள் ஒன்பது மற்றும் அறிவியல் கணிதப்படி எண்களும் ஒன்பது ஆகும். இந்த ஒன்பது எண்களே உலகத்தை சுற்றி வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் ரோமானியர்கள் எங்களை உருவாக்கி அதற்கு ரோமன் நம்பர் என்று அடையாளம் வைத்தார்கள். கால மாறுதல்பின் அதை வேறு வடிவமாக மாற்றியமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். இன்று அவை உலக அளவில் மிக பிரபலமாக உள்ளதை நாம் அறிவோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்களை எழுத்தாலும் எழுதப்பட்டது. பின்பு எங்கள் உலக நடைமுறைக்கு இன்றியமையாதது என்று எண்ணி ஒன்பது எங்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது. எண்கள் கோள்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்வு ஹீரோஷாமா என்பவர் எண்களுக்கும் கோள்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார் என்று சொல்லப்படுகிறது. பின்பு அவர் ஜப்பான்னுக்கு சென்று பிரபலபடுத்தியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் எண்கள் ஜோதிடத்திற்கு தொடர்பு உள்ளதா? என்று நாமும் ஆராய்ந்தோம் .அவ்வகையே வேறு மாறுதலாக எழுதி உள்ளோம். ஒருவர் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை கொண்டு கூட்டு தொகையாக வரும் எண்ணை கொண்டு கோள்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒத்து வருகிறதா என்பதை ஆராய்ந்தோம்.

முகவுரை- 10

குறிப்பு: ஒரு குழந்தை பிறந்தவுடன் சில நாட்களில் குழந்தைக்கு பெயர் வைக்கப்படுவதுண்டு. சிலர் நாள் நட்சத்திரப்படி பெயர் சூட்டுவார்கள். சிலர் குலதெய்வத்தின் மூலமாக பெயர் சூட்டுவார்கள். பலர் பெயரளவில் இருந்து விடுவார்கள். இன்றைய சூழ்நிலையில் நுமேரோலாஜி மூலமாக பெயர் மாற்றி கொண்டால் வாழ்வில் வசந்தம் காணலாம் ,உலகில் பிரபலமாகி விடலாம் என்று மக்களை முட்டாள்ளாக்கி வருகிறார்கள். அதையும் பலர் முட்டாள்தனமாக நம்பி வருகிறார்கள். உதராணமாக: மூதறிஞர் ராஜகோபால ஆச்சாரியார், ஓமந்துரர் இராமசாமி, கர்மவீரர் காமராஜர், ஜென்டில்மன் பக்தவச்சலம், அறிஞர் சி.என். அண்ணாதுரை, மக்கள் திலகம் எம் .ஜி. இராமச்சந்திரன், சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம், முத்தமிழ் காவலர் சி.ஆ.பே.விஸ்வநாதம் ஆகியோர் தங்கள் இயற்பெயரில் உலகில் பிரபலமாகி சரித்திரத்திலும் இடம் பெற்றவர்கள். மேலும் நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன் போன்றவர்கள் அரசியல் பகுத்தறிவிற்கு ஏற்றாற்போல் தங்களின் பெயரை மாற்றிக்கொண்டார்கள். தவிர எண்கணிதப்படி மாற்றி கொண்டது கிடையாது. இவர்கள் அனைவரும் இளம் வயதில் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறியவர்கள் என்பதை அறியலாம். எந்தவித கஷ்டமும் இல்லாமல் எவரும் உயர்ந்து விட முடியாது இது உறுதி. அதைவிடுத்து சுலபமாக பெயரை மாற்றி கொண்டால் உயர்ந்த அந்தஸ்து பெறலாம் என்பது பதம் பசலித்தனம்.

முகவுரை- 11

பொதுவாக: மனிதர்கள் ஏற்ற தாழ்வில் சனிஷ்வரே அனைத்தும் நிர்ணயிக்கபடுவதாக சொல்லப்படுகிறது. அவன் திருவிளையாடலின்றி வேறு ஏதும் இல்லை. தனிமை, பயம், சோம்பல், மந்தபுத்தி, வெட்டிபேச்சு, வேதனை, சோதனை, கலக்கம், வறுமை, துக்கம் ,தண்டனை, குற்ற உணர்வு இவைகள் அனைத்தும் மனித வாழ்கையில் சந்திக்க நேரும் என்பதே. (உயர்ந்த வாழ்கையில் வாழ்ந்தவர்கள் எல்லாம் இறுதி காலத்தில் பரிதாபமான நிலையில் போனவர்கள் உண்டு) தாழ்ந்த நிலையில் வாழ்ந்தவர்கள் எல்லாம் தன் இறுதி காலத்தில் உயர்ந்த நிலையை பெற்றதும் உண்டு. இப்படி வாழ்கையின் ஏற்றத்தாழ்வை பகிர்ந்தளிப்பது சனீஸ்வரரின் பெருமை ஆகும். இதையே பெரியோர்கள் ஊழ்வினை என்பார்கள். சிலர் நன்கு வாழும்பொழுது பெருமை பேசுவார்கள் அவர்களின் கடந்த காலத்தை பின்னோக்கி பார்த்தால் சிறுமை ஒளிந்திருக்கும் என்பதை அறியலாம். ஆகவே பெருமையும் சிறுமையும் காலச்சக்கரத்தின் இரு துருவங்கள் என்ற படிப்பினை கொண்டு வாழ்க்கை மேற்கொள்வோமாக. முக்காலத்தையும் முற்றும் உணர்ந்த முப்பாலிலே முத்தமிழ்க்கழந்து காலம் அறிதல். என்ற அதிகார நூலைப் படைத்த திருவள்ளுவரின் அறிவுரைப்படி வாழ்வில் ஒளி பெறுவோம்.